இழப்புகள்
தரும் வலி
எந்த இழப்பும் இதயத்தைச் சுட்டெடுக்கும்:
நொந்துபோக வைக்கும் நொடிப்பொழுதில் – அந்தக்
கணத்தில் வலிதான்; மனத்தில் திடம்கொள்;
ரணத்தில் விழாது நட!
எதைநீ கொணர்ந்தாய்? எதைத்தான்நீ கொள்வாய்?
எதுவும் உனதல்ல இங்கே – அதனால்
இழப்புகள் ஏதுமில்லை; எண்ணம் தெளிக;
அழகாகும் உன்வாழ்க்கை ஆம்!
வாழ்க்கை நிலையல்ல; வாய்த்த பொருளும்தான்!
ஆழ்ந்தே இதைஉணர்ந்தால் ஆனந்தம் – வாழ்க்கையில்
வாடிக்கை ஆகும் வருவதும் போவதும்!
வேடிக்கை பார்த்து விடு!
-
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment