Wednesday, 14 September 2016


ஞானசுந்தரம் 




சங்கத் தமிழ்படிக்க, சத்தான நூலெழுத

உங்கள் மடல்வரிகள் ஊக்குவிக்கும்தங்களின்

அன்பறிந்து உள்ளமயில் ஆடிக் களிக்கிறதே

நின்பண்பு, வள்ளலார்க்கு நேர்


ஆயிரமாய் இங்கே அறிஞர்கள் உண்டெனலாம்

ஞாயிறாய் நீ, தமிழ் ஞாலத்தில்ஓயாதீர்

அன்னைத் தமிழ்ப்பணி ஆயுளைக் கூட்டிவிடும்

நின்னைப் புகழும் நிலம்.


ஆகாஉம் பேரில் அறிவழகு மின்னுதே

ஓகோ எனவளரும் உம்ஆற்றல்ஆகாரம்

ஊட்டுகிறாய் தாய்தமிழ்க்கே உன்புதுச்சொல் தேடலால்!

காட்டுகிறோம் நன்றியைக் காண்.  


அன்புடன்


கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment