காதல்
கொலை
பொன்மனதில் இருந்து
புறப்படும்
பூங்காற்றுகள் இரண்டு
கட்டித் தழுவும் சுகமே
காதல்
காதலின்
கைகளில்…..
கவிதைப் புத்தகம் இருக்கலாம்
கத்தி வந்தது எப்படி?
வருடிக் கொடுக்க
மயிலிறகு இருக்கலாம்
வெட்டரிவாளும்
வீச்சரிவாளும் வந்தன எப்படி?
இங்குக்
காதலுக்குத் தீர்ப்பு எழுதுவது
கத்தியே !
ஊர் எல்லையில்
இருந்தபடியே
இதைப் பார்த்துக்கொண்டிருந்த
கருப்பச்சாமி
தூக்கி எறிந்து உடைத்தார்
தன் கையில் வைத்திருந்த
சுதைமண் கத்தியைக் கூட !
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment