இனி
ஒரு விதி செய்வோம்
ரத்தத்தை
ஆறாகப் பொங்க விட்டு
நம்மக்கள்
உயிர்பறித்து மகிழு கின்றார் ;
சித்தத்தைக்
கொடும்விஷத்தில் தோய்த்தெ டுத்துத்
தேசத்தை
உருக்குலைக்க முயலு கின்றார் ;
யுத்தத்தை
நடத்துகின்றார் மறைந்து நின்றே ;
உயிர்குடிக்கும்
ஆயுதங்கள் குவித்து வைத்தே ;
மொத்தத்தைப்
பார்க்கையில் பயங்க ரத்தை
முளையிலேயே
கிள்ளிவிட விதியைச் செய்வோம்!
பாரதத்தின்
படைத்தளத்தில் நுழைந்து விட்டார் ;
பயங்கரத்தின்
வளர்ச்சியிது! பின்னே நிற்போர்
யாரென்றே
அடையாளம் கண்டு விட்டோம்
இனிபொறுத்துக்
கொண்டிருத்தல் மடமை ஆகும்.
கோரப்பல்
காட்டுகின்ற தீவி ரத்தை-
கொடுமையே புரிகின்ற பயங்க ரத்தை
வேரோடு
பிடுங்கிவிட விதியைச் செய்வோம் !
வெற்றிமணி ஓசையினை எங்கும் கேட்போம் !
அன்புமனம்
அனைவருக்கும் இருந்து விட்டால்
அகிலத்தில் அமைதிப்பூ வாசம் வீசும் ;
பண்புகுணம்
நல்லொழுக்கம் யாவற் றையும்
பாதுகாத்து நாம்வாழ்ந்தால் விலகும் தீமை ;
நண்பர்களாய்
அயலுறவு அமைந்து விட்டால்
நல்லுதவிப் பரிமாற்றம் நிகழும் நித்தம் ;
மண்புவியில்
அப்படியோர் உலகைக் காண
மனமொத்து
விதிசெய்வோம் ; மகிழ்ந்து வாழ்வோம்!
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment