கனவொன்று இல்லையெனில்
முன்னோக்கி நகராது
யாருடைய வாழ்க்கையும்
வானத்து நட்சத்திரங்களை
வலைபோட்டுப் பிடித்துவந்து
என்
அறைக்குள் கொட்டுகின்றன
கனவுகள்
விடிந்த பின்தானே தெரிகிறது
அறைமுழுவதும்
குப்பைக் கூளங்களும்
கொடும் நாற்றங்களும்
நிறைவேறாமலே போய்விட்டன
என் முதல் கனவின் வரிசையில்
எல்லாக் கனவுகளும்
இருப்பினும்
கனவுப் பரணில் இருந்து
கலைத்துப் போட்டுத் தேடிக்
கண்டுபிடித்தேன்
முதல்கனவை
“மரத்தடிப்
பிள்ளையாரிடம்
மனமுருகி
வேண்டி நிற்கிறேன்
ஞானப்பழம்
தாவென்று”
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment