பட்டதாரி
பூமிக்கு வந்த
ஞான வானம்
அன்றைய பட்டதாரி
இலட்சங்கள் தா
பட்டங்கள் இதோ
கல்லூரிக் கடை
ஆங்கிலப் பட்டதாரி
கையில் தலைகீழாக
இந்தியன் எக்ஸ்பிரஸ்
படிக்காத கொத்தனார்
விஐபி நகரில்
சொந்த வில்லா
கல்லூரிக் குவியல்
பட்டதாரிகள் உற்பத்தி
வேலை இல்லாத் தமிழ்நாடு
பட்டதாரிகள் கைகளில்
பிச்சைப் பாத்திரங்கள்
நாளைய தேசம்
வெறுங்கையோடு சரஸ்வதி !
வீணையை விற்றுவிட்டார்கள்
கல்வி முதலாளிகள்
கட்டுக் கட்டாகக்
கல்விப் பட்டங்கள்
பழைய பேப்பர் கடை
சுழல் நாற்காலியில் மேஸ்திரி
டீ, சிகரெட் வாங்கித்தரும் வேலைக்கு
இன்ஜினிரிங் பட்டதாரி
சரஸ்வதி தேவி வீட்டில்
ஒப்பாரி கேட்கிறது
சிதைத்தீயில் கல்வி
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment