ஜன்னல்
நிலா
தொடர்வண்டியின் ஜன்னலோரம்
முகத்தில் காற்று உரச உரச
உட்கார்ந்திருந்தேன்
தொடர்ந்து வந்தது
தூரத்து நிலா
வீட்டுக்கு வந்து
திறந்தேன் ஜன்னலை
அங்கேயும்
அருகில் வந்து காத்துக்கிடந்தது
அதே நிலா
நிலவை
அகன்ற திடலில்
அமர்ந்து
அண்ணாந்து பார்த்தால்
கழுத்துச் சுளுக்கிப் போகலாம்
ஜன்னல் வழியாகப் பார்த்தால்
கவிஞன் ஆகலாம்
யாரும்
கதவு திறந்தால்
காற்று வரும்
காதலன் திறந்தால்
பகலில் கூட நிலவுவரும்
எதிர்வீட்டு ஜன்னலில்
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment