வாக்கு உன் செல்வாக்கு
o
உன்னைப் பார்த்துத்
தலைவணங்கும்
ராஜ மகுடங்கள்
தேர்தலின்போது
மட்டுமே
o
உன்
கையில்
உள்ள
வாக்கு
வடையைப் பறிக்க-
ஆசை
வார்த்தைகள் பேசி
ஆடிப்
பாடி மயக்கும்
அரசியல்
நரிகள்
o
“நீதான்
நேரில்
வந்த தெய்வம்” என
உன்னை
ஊட்டி
வார்த்தைகளால் குளிர்வித்து-
தலைமீது
கைகுவித்துக்
கும்பிடு
போடும்
கோவில்
சொத்தை
கொள்ளை
அடித்த
கும்பல்
o
இரகசியமாய்
பணம்,
பொருட்கள் கொடுத்து
உன்
வாக்கை
வாங்கிக்
கொள்ள
வலைவிரிக்கும்
புனித வேடர்கள்!
o
உன்
காலில்
விழுந்து வணங்கும்
வெண்சட்டை
மிளிரும்
வெள்ளை
பூதங்கள்
குனிந்து
பார்
உனக்கே
தெரியாமல்
உன்
விரல்கள் துண்டிக்கப்பட்டிருக்கும்.
o
“உதவி என்று வருவோர்க்கு
என்
வீட்டுக்கதவு
எப்போதும்
திறந்திருக்கும்”
என்பார்
உன்
வாக்கை வாங்கும்வரை!
வெற்றி
பெற்றவரின்
வீட்டு
வாசலைப்
போய்ப்
பார்…
பூட்டிய
இரும்புக் கதவும்
பாய்ந்து
துரத்தும் நாய்களும்….
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment