Thursday, 29 September 2016



உழைப்பே உன்னதம்

உன்பூமி
உழைப்பை
உனக்குச் சொல்லிக்கொடுக்கிறது
அதுதான்
அதன் சுழற்சி

சோம்பிக் கிடந்தால்
நீ
படுத்திருக்கும் பாயும்
பாடையாகிப் போய்விடும்

உன்
உழைப்பில்
கஞ்சி குடித்துப்பார்
அமுதம்
அதுவாகும்

பிறர் உழைப்பில்
பிரியாணி சாப்பிட்டுப்பார்
மருத்துவ மனையின்
நீண்ட வரிசையில்
நீ

நீரில்
குளித்துப்பார்
உடல் நலமாகும்

வியர்வையில்
குளித்துப்பார்
வாழ்க்கை வளமாகும்

வாஷிங் மிஷின்
வேக்கம் கிளீனர்
மிக்ஸி கிரைண்டர்
செய்யும் வேலைகளை
செய்துபார் நீ

மருந்து தேவையில்லை
மருத்துவமனை தேவையில்லை

ஆம்
உழைப்பே மருத்துவம்
உழைப்பே மகத்துவம்

உடலுக்கு சாவிகொடு
உலகம் திறக்கும்
உன்னை வரவேற்று

 - கோ. மன்றவாணன்









No comments:

Post a Comment