மவுனம்
மனம்
அலைகிறது
மவுனக்கூடு
தேடி
நிரந்தர
மவுனம்
ஒவ்வொருவருக்கும்
உண்டு
மரணம்
இயற்கையின்
மவுனப்
புன்னகை
மலர்
ஓசையற்ற
உலகம்
ஆசையற்ற
உள்ளம்
மவுனக்
கனவு
துறவியின்
அழகு
மவுனம்
காதுகேட்புக்
கருவியைக்
கழற்றி
வைத்தேன்
மனைவி
ஏசிக்கொண்டிருக்கிறாள்
மவுனச்
சிறைக்குள்
மனதை
அடைத்துப்பார்
விடுதலை
சங்குக்குள்ளும்
கேட்கிறது
தூரத்துக்
கடலோசை
பூமிக்குள்ளும்
அலையற்றுச்
செல்லும்
மவுன
நதி
தியான
மண்டபம்
ஒருவரும்
இல்லை
டிக்டிக்
சுவர்க்கடிகாரம்
சொற்களின்
கல்லறை
மவுனம்
அமைதி
வேண்டி
ஆலயத்துள்
வந்தேன்
ஆரவாரித்தது
ரிங்டோன்
மவுன
சாமியாரின்
உண்மை
தெரிந்தது
பிறவி
ஊமை
தேவாலயம்
மனஒருமை
கலைந்தது
ஒலிபெருக்கியில்
ஜெபம்
தேவாலயத்தில்
மணியோசை
படபடத்தது
மவுனப்புறா
திருப்பள்ளி
எழுச்சிக்குத்
தடை கோருகிறார்
திருமால்
வண்டு
இல்லாத உலகில்
பூக்கள்
மவுனம்
மவுனித்தேன்
காதுக்குள்
வீறிட்டு அலறியது
உலகம்
கனவற்ற
தூக்கம்
மவுனத்தின்
ஒத்திகை
புத்தனின்
மிச்சம்
அழகின்
உச்சம்
மவுனம்
No comments:
Post a Comment