Saturday, 17 September 2016



மழை மறைவு பிரதேசம்

எங்கள் தாத்தாக்கள்
ஆறு குளங்களில்
நீச்சல் அடித்தார்கள்.

எங்கள் அப்பாக்கள்
ஆறு குளங்களில்
கிரிக்கெட் விளையாடினார்கள்.

நாங்கள்
ஆறு குளங்களில்
கல்நட்டு
மனைவணிகம் செய்கிறோம்.

நாளை
அகழ்வாராய்ச்சி செய்து
நதி ஓடிய தடத்தை
யாராவது
கண்டுபிடிப்பார்கள்.


கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment