சும்மாடு
வைத்த
தலையில்
ஒருகுடம்
இடுப்பில்
இன்னொரு
ஒருகுடம்
தொங்கிய
கையில்
மற்றொரு
குடம்
என்றபடி…
சா்க்கார்
சாலையில்
சா்க்கஸ்
வித்தை புரிந்தபடி…
வியா்க்க
விறுவிறுக்க
நெடுந்தொலைவு
நடக்கும்
எங்கள்
தாய்க்குலத்தின்
வியா்வையைச்
சேமித்துப்பார்.
வேறொரு
வீராணம்
உருவாகி இருக்கும்.
தாகத்தால்
ஆறு
குளங்கள்
சுருண்டு
கிடக்கின்றன
வறண்டு
கிடக்கின்றன!
எங்கள்
நகராட்சிக்
குழாய்களில்
வாயு
பகவானை அனுப்பிவிட்டு
வருண
பகவான் ஓய்வெடுக்கிறார்.
மழை
வெள்ளத்தை
வரலாற்று
ஏடுகளில்
பூதக்
கண்ணாடி வைத்துத் தேடுகிறோம்.
இன்று
தண்ணீரைப்
பணம்கொடுத்து
வாங்குகிறோம்.
நாளை
தங்கம்
கொடுத்துத்
தண்ணீா்
வாங்க வேண்டுமாம்!
வானமே…!
நாங்கள்
படும்பாட்டைப்
பார்த்தாவது
கண்ணீா்விட
மாட்டாயா?
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment