துணையாய்த்
தொடரும் நிழல்கள்
பள்ளிக்குச்
செல்லும்
பாதையில்
பாதாம்
மரத்தில் கல்வீசி
பருப்பு
சாப்பிடும் மாணவர்களோடு
உறவு
முடிச்சுப் போட்டதில்லை
ஒருபோதும்
அடுத்த
மாணவனின்
அழிரப்பரைத்
திருடியதில்லை
என்
திறந்த
கைகள்
இன்னொரு
மாணவனின்
சிலேட்டைச்
சேதப்படுத்திவிட்டு
வேறு
பக்கம் திரும்பி
வேடிக்கை
பார்த்ததில்லை
என்முகம்
அடி வாங்குவதில்
இருந்து தப்பிக்க
ஆசிரியையிடம்
சொன்னதில்லை
பொய்
ஆசிரியரே
கண்சாடை
காட்டியும்
காப்பி
அடித்ததில்லை
செங்கோல்
எனச்
செம்மாந்து
திகழும்
என் எழுதுகோல்
சுற்றிலும்
புது
மேகக் கூட்டத்தை உருவாக்கும்
புகை
நண்பர்கள் இருந்தும்
என்
உதடுகள்
கற்பிழக்கவில்லை
என் நா
சிகரத்தை எட்டித் தொட
எந்தக்
கெட்ட வார்த்தைக்கும்
கால்கள்
முளைப்பதில்லை
என்
சிந்தைக்குள்
நுழைய முடியாமல்
பின்வாங்கிச்
சென்றது
மதுவின்
வாசனை
என்னை
அடிமைப்
படுத்த முடியாமல்
தோற்றுப்
போயின
ரூபாய்க்
கட்டுகள்
ஊழலையோ
பிழைகளையோ
நெருங்க
விடுவதில்லை
என்
நேர்மைத்தீ
இப்படி
என்னைக் காத்துத்
துணையாய்த்
தொடரும் நிழல்கள்எனத்
தொடர்ந்து
வருவன….
என்தாய்
பாலோடு சேர்த்துப் புகட்டிய
நீதி நெறிகள்!
-
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment