ஒரு மதுக்கடை
ஒன்பது சுடுகாடுகள்
·
சுடுகாட்டுக்குப் போகச்
சுருக்கமான வழி
இதோ… மதுக்கடை!
· தள்ளாடிய மந்திரி
மேடையில் வாந்தி
காந்தி பிறந்தநாள் விழா
·
வனவிலங்காய்
மாறி வந்தது
மதுக்கடையில் நுழைந்த மனிதன்
·
மதுக்கடையில்
சரக்கு காலி
கல்லூரி விழா
·
கற்பை விலைதந்தாள்
கால்புட்டி மதுவுக்கு
கண்ணகி வாழ்ந்த நாடு
·
மதுவேடனின்
வலைவிரிப்பு
மாட்டும் இளைஞா் பறவைகள்
·
உலகம் சுழல்வதைக்
கண்டுபிடித்தவனும்
குடிகாரனோ…?
·
மதுஒழிப்புப் போராட்டம்
பங்கேற்ற அனைவருக்கும்
குவாட்டா் பட்டுவாடா
·
ஊருக்குள்
ஒரேஒரு மதுக்கடை
ஒன்பது சுடுகாடுகள்
-
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment