வயல்வெளியில்
கால் கடுக்காதோ
காவல் பொம்மைக்கு
வயல்வெளியில்
சேற்று நண்டுகள்
சிலுமிஷங்கள்
வயலுக்குக் கிச்சுக்கிச்சு
தானியப் பதுக்கல்
தண்டனையில் இருந்து தப்பும்
எலிகள்
வயல்மண் தயாரித்த
நூடுல்ஸ்
மண்புழுக்கள்
காற்று
தலைகோதி விடுகிறது
நாற்றுகள்
வரப்புகள்
வழக்குகள்
எல்லை தாண்டும் ஆசைகள்
சுற்றிலும்
தென்னை வாழை மரங்கள்
வயல் விசிறிகள்
இன்றும் போரடிக்கின்றது
இயந்திர யானை
டிராக்டர்
தங்கப்பல் வரிசை காட்டிச்
சிரிக்கின்றன
நெற்கதிர்கள்
மரகதப்புல் சேலையில்
வெட்கப்படும்
நிலமங்கை
நாளை மலரும்
கான்கிரீட் நகர்கள்
இன்றைய வயல்வெளிகள்
வானத்துப் பறவைகள்
முகம்பார்த்துச் செல்கின்றன
வயலில் தேங்கிய நீர்
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment