இரக்கம்
பசியோடு சிறுமி
பழத்தை உதிர்த்தது
மரம்
எச்சில் இலைகள்
ஏழைக் குழந்தைகள்
கடந்து சென்றன நாய்கள்
ஆலயத்துள் உண்டியல்
வெளியே பிச்சைத் தட்டுகள்
இரக்க தேசம்
ஈழத்தில்
இரத்த வெள்ளம்
புத்தரின் கண்ணீர்
வடலூரில்
மாட்டிரைச்சிக் கடை
வள்ளலாரின் கண்ணீர்
ஆடை இன்றிக் கிடந்தாள்
அவள்
மலர்ப்போர்வை போர்த்தியது மரம்
தற்கால அகராதியில்
தேடியும் கிடைக்கவில்லை
இரக்கம் என்ற சொல்லை
அநாதைக் குழந்தைகள் வெளியே
ஆலயத்துள்
பிள்ளைவரம் கேட்கும் பெண்கள்
சாவு வீட்டில்
ஒப்பாரி வைக்கச் சம்பளம்
இரக்கம் மரணம்
No comments:
Post a Comment