முப்படை வந்தாலும்
எப்படை வந்தாலும்
சிறைப்படுத்த
முடியாது
மனத்தை
திண்டுக்கல் பூட்டுண்டு
திறவுகோல் உண்டு
வீட்டுக்கு!
வானமாய்ப் பரந்து கிடக்கும்
மனத்துக்கு?
ஊரை அடித்துச்
செல்லும்
கரையுடைத்து வரும்
காட்டு வெள்ளம்
முட்டுக்கட்டை
இல்லாத தேர்
பலருக்குப்
பலிபீடம்
மூக்கணாங்கயிறு
இல்லாத மாடு
குடைசாய்ந்து
கிடக்கிறது
வண்டி
காமிரா கண் ஏமாறவில்லை
துறவறம் பூண்ட
சாமியும்
காமப்
பஞ்சணையில்
கட்டளை
இடாவிட்டால்
உன்னைச்
சிறையில் தள்ளி
வெளியில்
திரியும் மனம்
மனத்திற்குக்
கட்டளையிட
மந்திரம் தேடி
அலையாதே
குணத்தால் நிரம்பு
மனம் அடங்கும்
உனக்கு
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment