பல்லாயிரம் ஆண்டுகளை நனைத்த
நதி
நினைத்திருக்காது
வீட்டுமனைகளாக
விற்கப்படுவோம் என்று
ஏசு பேசிய
எபிரேய மொழி நினைத்திருக்காது
தானும்
சிலுவையில் மரிப்போம் என்று
நிமிர்ந்து நின்ற
நெடுங்குன்றம் நினைத்திருக்காது
கல்குவாரி குள்ளனின்
கால்மிதியில் நசுங்குவோம் என்று
அடர்ந்த படர்ந்த
காடு நினைத்திருக்காது
நிழலைத் தொலைப்போம் என்று
ஊர்காக்கும் சாமி
நினைத்திருக்காது
அகலச் சாலைத் திட்டத்தில்
அகற்றப்படுவோம் என்று
ஆனாலும்
நிலைக்கும் என்றே
நினைக்கிறார்கள் அமைச்சர்கள்
ஆட்சியும்
அதிகாரமும்
-கோ. மன்றவாணன்
மாற்றங்களுக்கு மிகவும் கவித்துவமான ஓப்பீடு....
ReplyDeleteஇறுதியில் ஆட்சியாளர்களையும் இறுக்கம் என்ற எதார்த்தத்தை எதிர்பார்களை.....
இன்று L.G.ரமேஷ் பாபு சொன்னது நடந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன் இந்த கவிதையால் (LOL)
நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் - நாம்
ReplyDeleteநேர்வழியில் நடந்துசென்றால் நன்மை அடையலாம்.