முன்னரே...
பறவைகளுக்குத் தெரிந்திருந்தது
பரந்த உலகின்
முழுமேனி
மீன்களுக்கும் தெரிந்திருந்தது
வெவ்வேறு கண்டங்களின்
விலாசங்கள்
மலை, காடு, கடல். நதி, பள்ளம், மேடு என
மல்லாந்து கிடந்த பூமியை
நெளிகோடுகளில் தாமதமாகப் படம்பிடித்தவன்
நேற்றைய மனிதன்
சிதறிக் கிடந்த பூமித் துண்டுகளைச்
சேர்த்து வைத்துப் பார்த்தது
கடல் பயணம்
புயலில் தத்தளிக்கும் படகே
பயணத் தடமாக்கியது
கடலை
வாஸ்கோட காமா இல்லையென்றால்
வெள்ளையர்கள் ஆண்டிருக்க முடியாது
இந்தியாவை
நாடு பிடிக்கும் வெறியை
நங்கூரம் இட்டுக் காத்ததும்
கடல்பயணம்தான்.
நிலவற்ற வானம்
இருண்ட கடல்
திசையழிந்த வெளி
திடீரெனத் தாக்கும் கடலுயிரினங்கள்
சுழன்று வீசும்
சூறாவளி
தண்ணீர் இல்லை தாகம் தணிக்க
எந்த நேரமும் மரணம்
இதுவொரு
முடிவறியாத பயணம்
கண்டங்களையும் நாடுகளையும்
கண்ட மாலுமிகள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்
வெற்றிகொள்ளத் தக்கவையே பிரச்சனைகள்
-கோ. மன்றவாணன்
"பறவைகளுக்குத் தெரிந்திருந்தது
ReplyDeleteபரந்த உலகின்
முழுமேனி
மீன்களுக்கும் தெரிந்திருந்தது
வெவ்வேறு கண்டங்களின்
விலாசங்கள்"
வசீகரிக்கும் தொடக்கம்
நன்றி மகளே...
ReplyDelete