எதிரே மலை இருக்கிறதா?
கண்ணுக்குள் அவள் நினைவே
காட்சி ஆகிறது
நெரிசல் மிகுந்த
நெடுஞ்சாலையில் வாகனத்தை ஓட்டுகிறேன்
வழிநெடுகிலும்
ஞாபக மரங்கள் தோன்றிக்
கடந்து செல்கின்றன என்னை
அலுவலகத்தில்
என்னை மொய்த்து நிற்கின்றனர்
வாடிக்கையாளர்கள்
நாற்காலியில் உடல் ;
இறந்த காலத்தில் உயிர்வாழ்கிறது மனம்!
மேகம் படாத
நட்சத்திர வானத்தைப் பார்க்கிறேன்
நினைவு மழை
இன்று மலர்கொய்து முகர்கிறேன்
நேற்றைய மணம்
நிகழ்காலத்திலும்
என்னை ஆட்சி செய்கிறது
கடந்த காலமே
இருட்டிலும் தெரிகிறது
நினைவு
நிழல்
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment