மலருக்கு
மணமுண்டு என்றார்கள் ;
மனமுண்டு என்பதை மறந்தார்களா?
கவி மாட்சியாலோ
கண் ஆட்சியாலோ
சொல்லி முடியாத அன்புணர்வை
ஒரு ரோஜாப்பூ
உணர்த்திவிடும் பெருமிதத்தோடு
காதலர் தினத்தில்
இறைவன் திருமேனியில் தவழும்
மலரெடுத்துச் சூடுவதில்
மங்கலம் காணுகிறார் மங்கையர்
மணப்பெண்ணை அலங்கரிப்பதில்
தோட்டத்துப் பூக்களுக்குள்
போட்டி உண்டு
தலைவனின்
தோள்களைத் தொட்டு உறவாட
எந்த மலருக்குத்தான் ஆசையில்லை?
ஏழைச் சிறுமியின் குழலில்
கொலுவிருக்க
எனக்கொரு கனவு இருந்தது
கல்லறையை அடைவது சவம் என்றால்
நான்...?
இன்று
கல்லறைப் பூவானேன்
கண்ணீர்த் தீவானேன்
-
---கோ. மன்றவாணன்
---கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment