இருகை இல்லாத மனிதன்
சொன்னான் :
“இந்த உலகம்
என் மடியில்”
காலில்லாத மனிதன் எழுதினான் :
“இந்த உலகம் சுற்றிவரும்
என்னை”
சிறகில்லாத பறவை சொன்னது :
“குளத்தில் அலகு நுழைத்துக்
கொத்திச் செல்வேன் வானத்தை”
இறுகிய
கல்பாறையில் முளைத்த விதை சொன்னது :
“தடையொன்றும் இல்லை கண்ணா”
நம்பிக்கை சொன்னது :
“எந்த இழப்பையும் தாண்ட முடியும்
மனக்கோல் ஊன்றி”
புதிய பக்கத்தைத் திறந்துவைத்து
வரலாறு சொன்னது :
“வா சாதிக்க”
-கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment