நிலாவிடு தூது
புறாவைத்
தூதுவிட்டால்
வலைவிரித்துப்
பிடிப்பார்களோ…
காற்றைத்
தூதுவிட்டால்
புறப்பட்ட
இடத்துக்கே
திரும்பாதோ….
நதியைத்
தூதுவிட்டால்
கட்டிவிடுவார்களோ…
கல்அணை
தோழியைத்
தூதுவிட்டால்
அவள்
அழகில்
அவன்
மயங்கிவிடுவானோ…
வண்டுவைத்
தூதுவிட்டால்
வழியில்
உள்ள
பூவனத்தில்
மதுகுடித்து
போதையில்
பாதை
மாறுமோ….
என
ஐயுற்ற எனக்கு
உன்னை
அல்லால் யாருமில்லை
தூது
செல்ல!
ஞாபகம்
வருதே…
அன்னையின்
மடியில் அமர்ந்து
அன்று
மல்லிகைப்பூ கொண்டுவரச் சொன்னேன்
இன்று
அல்லலுறும்
என்மனதை ஏந்திச்சென்று
அவன்முன்
வைத்து
நியாயம்
கேட்டுவர
நீ
வருவாயா நிலவே!
-
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment