தீபத்தின்
ஒளியில்
திரண்டு வந்து
அச்சுறுத்தியது இருட்டு
சிரித்தது அகல்விளக்கு
தலைகுனிவதே இல்லை
தீபம்
கவிழ்த்துப் பார்த்தும்
கருவறை இருட்டு
கடவுளின் முகதரிசனம்
தீபத்தின் கருணை
இரவு மாடம்
தீப ஒளி
நிலவு
பகலுக்கும்
விளக்குண்டு
சூரியன்
குடிசைக்குள்
குத்துவிளக்கு ஏற்றினேன்
கோவிலானது
அகல்விளக்குகளின்
அணிவரிசை
ஒளிக்கொலு
இருட்டா?
விளக்கேற்று
சிக்கலுக்குத் தீர்வு
வெளிச்சம்
விளக்குக்கு அல்ல
காந்தி
தீபத்தின் ஒளியில்
தேடு
நற்பாதை
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment