Thursday, 29 September 2016



தண்ணீருக்கு இரத்தம்

மூன்று பக்கமும் பெருங்கடல்
நாட்டுக்குள்
தண்ணீர்ப் பஞ்சம்

கான்கிரீட் கட்டடங்களுக்குள்
புதைக்கப்பட்டன
ஆறுகள்

பணம்படைத்தவர்கள் வாங்கும்
தங்கமாகிவிட்டது
தண்ணீர்

தாக மிகுதியால்
உயிர்துடிக்க விக்குகிறாள்
நிலமெனும் நல்லாள்

தமிழ்காணத் துள்ளிவந்த காவேரி
ஆயுள் சிறைவைக்கப்பட்டாள்
கருநாடகத்துக்குள்ளே

தஞ்சை பாலைவனத்தில்
நாளை ஒட்டகங்கள் சாகும்
தண்ணீர் இன்றி

தண்ணீருக்குச் சண்டை
உற்பத்தி ஆகிறது
ரத்தநதி

வேற்றுமை வண்ணங்களில்
ஒற்றுமை ஆடையுடுத்தி மிளிர்கிறாள்
இந்தியத்தாய்

தாய்மானம் காக்கும்
பிள்ளைகள்
நாம்

பகிர்ந்து பாருங்கள்
மேகம் திரண்டுவந்து பாடும்
மழைவாழ்த்து


- கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment