Friday, 16 September 2016


காகிதங்கள்

எழுதுகோல்
நடனம்
காகித மேடை

இலக்கியம்
சாகாது
காகித வரம்

மனதுக்கு மனது
தூதுப் பாசனம்
கடிதத் தாள்கள்

ஏழைகளை உருவாக்குகின்றன
பத்திரத் தாளும்
பணத்தாளும்

குழந்தைகளின் கப்பல்
காகிதத்துக்கு
நன்றி

காற்று
உருட்டிப் புரட்டி விளையாடியது
தெருக்காகிதங்கள்

மாட்டுத் தீவனம்
வண்ண வண்ணச்
சுவரொட்டிகள் 

உயிரற்ற உடல்
புத்தகம் இல்லாத
வீடு

காகிதங்கள்
வரலாறு நெடுகிலும் மூட்டின
புரட்சித்தீ

மரங்களின்
மறைவு பிரதேசம்
காகிதம்

காகிதங்கள் மட்கி
எருவாயின
மீண்டும் மரங்கள்

காகிதத்துக்குப்
பணிஓய்வை வலியுறுத்துகிறது
கணினி


- கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment