Sunday, 28 August 2016

அறிவு


அறிவாளிகளே… கதவைத் திறவுங்கள்
மூடக்கவி வருகிறது
வலக்காலை எடுத்து வைத்து

ஏவுகணை புறப்பாடு
பஞ்சாங்கம் பார்த்தார்
விஞ்ஞானி

இராகு காலம்
தீர்ப்பைத் தள்ளிவைத்தார்
நீதிபதி

கழிவறையைச் சமையலறையாய் மாற்றினார்
வாஸ்து ஜோதிடரைச் சந்தித்த
கட்டடப் பொறியாளர்

குறைந்த வாடகை
குடியிருக்க வரவில்லை
கதவுஎண் 8

பூனை
குறுக்கே போனது
குகைக்கே திரும்பியது புலி

ஜாதகங்களைப் பார்த்து
வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தது
பகுத்தறிவுக் கட்சி

அறிவு
மண்டியிடுகிறது

மடாலயம்

No comments:

Post a Comment