செல்வ நிதியை
சேர்த்து வைக்க வழியேது
குடிசையில் பிறந்த அவளுக்கு
தனியார் பள்ளியில் இடமேது
சுமைதூக்கும் தந்தையின்
மகளுக்கு
ஆசை அவளுக்கில்லை
புத்தாடை அணியவோ
பூச்சூடிப் புன்னகைக்கவோ
பொன்னகையில் மின்னவோ...
கல்வி ஒன்றுதான்
நிலவைத் தொட
அவளுக்குக் கிடைத்த நூலேணி
அப்துல்கலாம் சொல்கேட்டுத்
தூங்கவிடாக் கனவொன்றைக்
நட்டு வளர்த்தாள்
1176 / 1200
உயர்மதிப்பெண் பெற்றாள்
ஏழைக் கலைமகள்
கழுத்தில் ஸ்டெதஸ்கோப்
தவழ்ந்தாடி இருக்கும்
கடந்த ஆண்டாக இருந்திருந்தால்
கழுத்தில் தூக்குக்
கயிறு இறுகியதே
நீட் ஆண்டாக இது இருந்ததால்
சக்கரங்களில் நசுங்கியது
தூக்கி வெளியில் கிடாசிய
காமராசர்
சேர்த்து வைத்த கனவு
-கோ. மன்றவாணன்
உயர்மதிப்பெண் பெற்றாள்
ReplyDeleteஏழைக் கலைமகள்
கழுத்தில் ஸ்டெதஸ்கோப்
தவழ்ந்தாடி இருக்கும்
கடந்த ஆண்டாக இருந்திருந்தால்
கழுத்தில் தூக்குக்
கயிறு இறுகியதே
நீட் ஆண்டாக இது இருந்ததால்
சக்கரங்களில் நசுங்கியது
தூக்கி வெளியில் கிடாசிய
காமராசர்
சேர்த்து வைத்த கனவு
பா பளார் வரிகள்.... சமூகத்தின் மீது விழுந்திருக்கும் சரமாரி செவிட்டரை... அமைதியற்ற அரசியல் பேசுது! ஆட்சியாளர்களின் அலட்சியத்தை ஏசுது! from all ur creations... i like this poem most!! the best.... after reading this making us unrest.....
மகளே...
Deleteஉன் கவிதை ஒவ்வொன்றும் உயிர்மூச்சு
என் கவிதை ஒவ்வொன்றும் வெறும்பேச்சு
கோ. மன்றவாணன்