Wednesday, 16 May 2018

நீ கண் சிமிட்டினால்...







             இமைப்பட்டாம் பூச்சி சிறகடிக்கையில்
             கவிப்பூக்களைப் பறக்கவிடுகின்றன
             கண்கள்

             இமைகள் விசிறிவிடுகின்றன
             கண்ணுக்குத் தெரியாமல்
             கண்ணுக்கு வேர்க்குமோ

             உலகின் சிறந்தமொழி எதுவென்று
             ஓர் ஆராய்ச்சி நடந்தது
             கண்சிமிட்டி நீபேசும் மொழியே அதுவென்று
             கண்டறியப்பட்டது

             பசி, தூக்கம் இருக்காது
             பார்த்துக்கொண்டே இருக்கலாம்
             இமைகளும் விழிகளும்
             இணைந்து நடத்தும் நாடகத்தை

             சிமிட்டலும் ஒரு மீட்டலோ...
             மனதுக்குள் சுகம்பாய்ச்சுகிறது
             மன்மத ராகம்

             களவாட முடியாது
             கண்தூது சொல்லும் ரகசியத்தை

             காதல் அரும்பியோர்
             கண்அசைவால்தான்
             விரைந்து சுழல்கிறது ஞாலம்


             -கோ. மன்றவாணன்