Sunday, 18 September 2016


புறக்கணிப்பு

தாமதமாக வரும் தொடர்வண்டிக்காகக்
காத்துக் கிடக்கிறது
ஒரு கூட்டம்

குறுந்தேவதை போல்
குழந்தை ஒன்று
மடிதாவி மடிதாவிச் செல்கிறது
மடிதோறும்

அங்கு
உயிர்கொண்டு
உலா வந்தது
கொஞ்சல் இலக்கியம்

அருகே….
துவைத்தால் கிழிந்துவிடும்
அழுக்குடையோடு
இரு பெண்குழந்தைகள்

அந்த முகங்களில்
பாரத மாதாவின்
பரிதாபக் கோலம்

அந்தக் குழந்தைகளைப்
பார்ப்பதே தீட்டு என
குறுக்குச் சந்துக்குள் நுழைந்து ஓடின
அங்கிருந்த
அத்தனை விழிகளும்


- கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment